Yuvan Shankar Raja - Aanandha Yaazhai Lyrics

மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும்
முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று

ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்
இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில்
பாஷைகள் எதுவும் தேவையில்லை
சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும்
மழையின் அழகோ தாங்கவில்லை
உந்தன் கைகள் பிடித்து போகும் வழி
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி

இந்த மண்ணில் இதுப்போல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி

ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்

தூரத்து மரங்கள் பார்க்குதடி
தேவதை இவளா கேட்குதடி
தன்னிலை மறந்து பூக்குதடி
காற்றினில் வாசம் தூக்குதடி
அடி கோயில் எதற்கு தெய்வங்கள் எதற்கு
உனது புன்னகை போதுமடி

இந்த மண்ணில் இதுப்போல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி

ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்

உன்முகம் பார்த்தால் தோணுதடி
வானத்து நிலவு சின்னதடி
மேகத்தில் மறைந்தே பாக்குதடி
உன்னிடம் வெளிச்சம் கேக்குதடி
அதை கையில் பிடித்து ஆறுதல் உரைத்து
வீட்டுக்கு அனுப்பு நல்லபடி
இந்த மண்ணில் இதுப்போல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி
ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
This lyrics has been read 178 times.