Anirudh Ravichander - Neeyum Naanum Şarkı Sözleri

நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே
நீளம் கூட வானில் இல்லை
எங்கும் வெள்ளை மேகமே
போக போக ஏனோ நீளும் தூரமே
மேகம் வந்து போகும் போக்கில்
தூறல் கொஞ்சம் தூறுமே

என் அச்சம் ஆசை எல்லாமே தள்ளிபோகட்டும்
எந்தன் இன்பம் துன்பம் எல்லாமே உன்னை சேரட்டும்

நான் பகல் இரவு
நீ கதிர் நிலவு
என் வெயில் மழையில்
உன் குடை அழகு

நான் பகல் இரவு
நீ கதிர் நிலவு
என் உறக்கங்களில்
நீ முதல் கனவு

நீ வேண்டுமே
எந்த நிலையிலும் எனகென
நீ போதுமே

ஒளி இல்ல உலகத்தில்
இசையாக நீயே மாறி
காற்றில் வீசினாய்
காதில் பேசினாய்

மொழி இல்ல மௌனத்தில்
விழியாலே வார்த்தை கோர்த்து
கண்ணால் பேசினாய்
கண்ணால் பேசினாய்

நூறு ஆண்டு உன்னோடு
வாழவேண்டும் மண்ணோடு
பெண் உன்னை தேடும் எந்தன் வீடு

நான் பகல் இரவு
நீ கதிர் நிலவு
என் வெயில் மழையில்
உன் குடை அழகு

நான் பகல் இரவு
நீ கதிர் நிலவு
என் உறக்கங்களில்
நீ முதல் கனவு

நீ வேண்டுமே
இந்த பிறவியை கடந்திட
நீ போதுமே

கத்தால முல்லா முல்லா
கொத்தோடு கிள்ள கிள்ள
கொலையோடு அல்ல அல்ல
வந்த புள்ள

முன்தான துள்ள துள்ள
மோகராசி என்ன சொல்ல
முத்தத்தால் என்ன கொள்ள
வந்த புள்ள

கத்தால முல்லா முல்லா
கொத்தோடு கிள்ள கிள்ள
கொலையோடு அல்ல அல்ல
வந்த புள்ள

முன்தான துள்ள துள்ள
மோகராசி என்ன சொல்ல
முத்தத்தால் என்ன கொள்ள
வந்த புள்ள

கத்தால முல்லா முல்லா
கொத்தோடு கிள்ள கிள்ள
கொலையோடு அல்ல அல்ல
வந்த புள்ள

முன்தான துள்ள துள்ள
மோகராசி என்ன சொல்ல
முத்தத்தால் என்ன கொள்ள
வந்த புள்ள
Bu şarkı sözü 367 kere okundu.